Tuesday, July 26, 2011

சிக்கனா? மட்டனா? எது நல்லது...........




அசைவ உணவுகளில் முதல் இரண்டு இடங்களில் இருப்பது சிக்கனும் மட்டனும் தான். இதில் உடலுக்கு நல்லது எது என்ற விளக்கமே இந்த பதிவு.
பொதுவாக பலர் மட்டனில் கொழுப்பு அதிகம் என்று சிக்கனை அதிகமாக சாப்பிடுகிறார்கள். இது சரிதானா?





 மேலே உள்ள அட்டவணைப்படி பார்த்தால் சிக்கனை விட மட்டனில் 2.6 கிராம் கொழுப்பு தான் அதிகம் இருக்கிறது. மட்டனில் தசை பகுதியில் கொழுப்பு குறைவு. ஆனால் உள் உறுப்புகளில் அதிகம்.
எனவே கொலஸ்ட்ரால், மாரடைப்பு, சிறுநீரக நோய், ஆகியன இல்லாதோர் வாரம் ஒருமுறை மட்டன் சாப்பிடலாம். ஆனால் சமைக்கும் போது எண்ணெய், தேங்காய், தவிக்கவும். தசை பகுதியை மட்டும் உண்ணவும்.
சிக்கனில் கொழுப்பு குறைவு என்று பலர் சிக்கன் 65, சிக்கன் பிரைடு ரைஸ், சிக்கன் செட்டிநாடு சில்லி சிக்கன் என வெரைட்டியாக வெளுத்துக் கட்டுகிறார்கள். இவற்றில் சேர்க்கப்படும் எண்ணையும் தேங்காயும் சிக்கனை விட அதிக கொழுப்பு.
கொலஸ்ட்ரால், இதய நோய் உள்ளவர்களை கணக்கிட்டு பார்த்தால் சிக்கன் சாப்பிடுபவர்களுக்கும், மட்டன் சாப்பிடுபவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் சிக்கனை விட மட்டனில் இரு மடங்கு கலோரி உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மட்டன், சிக்கன், மீன் : தசை பகுதியை குழம்பு வைத்து சாப்பிடலாம்
முட்டை: கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் மஞ்சள் கருவை தவிக்கவும்.
கருவாடு: இதய நோய் சிறுநீரக நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிக்கவும்.

குறிப்பு: மேற்சொன்ன மட்டன் என்பது வெள்ளாட்டின் கறியையும், சிக்கன் என்பது பிராய்லரையும் குறிக்கும். (பக்ரித் ற்கு வெட்டப்படும் செம்மரியாட்டில் கொழுப்பு மிக அதிகம்)

சித்தமருத்துவத்தில் நாட்டுக்கோழி சூடு என்றும் சளி, இருமல், ஆஸ்த்மா, T.B நோயாளிகளுக்கு நல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
  

4 comments:

  1. ///இவற்றில் சேர்க்கப்படும் எண்ணையும் தேங்காயும் சிக்கனை விட அதிக கொழுப்பு///
    நல்ல தகவல்

    ReplyDelete
  2. சாலமன் பாப்பையாவை கூப்பிடுவோமா...

    நல்ல பதிவு D r ...

    ReplyDelete
  3. small doubt........., which is the best one to use as side dish for a------l

    ReplyDelete
  4. sir naan oru murai neeya naana parkum pozhudhu tambaram sanatorium sidha hospital head (name marandhu pochu) sonar, manithanku mika avasiyama porul thengai endrum, thengai ennai, nalla ennai olive oil, ivai moonrum oru manithan evalu vendumanalum serthu kollamnu sonar. neenga thengai kozhuppu nu solringa.

    ReplyDelete