தனது முதல் பதிவை வெளியிட்டு ஒரு மணி நேரத்திலேயே இன்ட்லியில் 100 வோட்டுக்கள் பெற்று சாதனை புரிந்த மதுரையை சேர்ந்த புண்ணாக்குபாண்டி_யிடம் நமது நிருபர் எடுத்த பேட்டி.....
'' புண்ணாக்குபாண்டிங்கறது உங்க உண்மையான பெயரா.? ''
'' இல்லீங்க..எம்பேரு அழகர்சாமிங்க. நமக்கு புண்ணாக்கு வியாபாரம். அதனால எல்லாரும் என்னை புண்ணாக்குபாண்டின்னு கூப்புடுவாங்க. அந்த பேரையே நம்ம பிளாக்குக்கு வச்சிடேங்க. ''
'' நீங்க என்ன படிச்சிருக்கீங்க? ''
'' ஆறாப்பு பாஸுங்க. பிற எப்பிடி இதெல்லாம்னு நினைக்கீங்களா ? .நமக்கு எல்ப்புக்கு ஒரு அசிட்ட்ண்ட் போட்டிருகேன். ( என்னது.. அசிட்டண்டா..?...ஓ அசிஸ்டண்டா...!) பன்னெண்டாப்பு படிச்சிருக்கான். டேய்.. முருகா ஐயாவுக்கு வணக்கம் போடுப்பா '' '' வணக்கம்னே '' ( இது வேறயா )
'' ஒரு மணி நேரத்தில 100 வோட்டு வாங்கற அளவுக்கு அப்படி என்ன எழுதினீங்க? ''
'' நெறய எழுதனும்னு நெனைச்சேன். ஆனா சுவிச்சு போடுல இருந்து ஒவ்வொரு சுவிச்சா தேடி அமுக்கி எம் பேர எழுதறதுக்கே ஒரு மணி நேரம் ஆயிருச்சு. சரி போதும்னு விட்டுட்டேன். '' ( அடப்பாவி .! கீபோர்ட சுவிச்சு போடுங்கறான். கீய சுவிச்சுங்கறான். இன்னிக்கு யார் முகத்தில முழிச்சேன்னு தெரியலயே .!)
'' இந்த பதிவுக்கு எப்படி 100 வோட்டு? ''
'' ஒரு வோட்டுக்கு 200 ரூபா குடுத்து போடச்சொன்னேன். அப்பத்தான் பேமசாகுமாம், எல்லாரும் படிப்பாய்ங்கலாம். முருகன் தான் சொன்னான். எப்பிடி...!!.. மதுரக்காரய்ங்கன்னா சும்மாவா !..( ஆஹா இப்பவே கண்ண கெட்டுதே..)
'' வேறென்ன பிளான் வெச்சுருக்கீங்க? ''
'' யாருமே கமண்ட்டு எழுதலயாம். அதனால ஒரு கமண்ட்டுக்கு 150 ரூபா பிக்ஸ் பன்னீருக்கேன். ( டேய் ரெம்ம்ப ஓவரா போற...! )
'' இவ்வளவு செலவு பண்ணி பிளாக் ஆரம்பிச்சதோட நோக்கம் என்ன.? ''
'' இதுல தான் யாரனாலும் திட்டலாமாமே. .புண்ணாக்கு வாங்கிட்டு பணம் கொடுக்காதவய்ங்க, கடன் வாங்கிட்டு திருப்பி கொடுக்காதவய்ங்க, எல்லாத்தையும் ஆத்தா அக்கான்னு திட்டப்போறேன். ( என்ன ஒரு வில்லத்தனம்.....! )
'' பதிவுலகத்துக்கு என்ன சொல்ல போறீங்க? ''
'' என்னது பதிவுலகமா.? இதென்ன புதுசா இருக்கு.!.நம்ம இந்தியாவ விட பெரிய உலகமா.?..''
'' !!!!!????@#$%!!!!!! ''
'' முருகா..! ஐயா களப்பா இருக்க மாதிரி தெரியுது.. சில்லுனு ஒரு ஜிகர்தண்டா கொடுப்பா ''
நல்லாத் தான் இருக்கு ஆனால்.........
ReplyDelete