ஒரு மருத்துவனின் கடமை நோயாளியை குணமாக்குவது மட்டுமே!...அது எந்த மருத்துவ முறையில் என்பதல்ல. அலோபதியோ, சித்தாவோ, ஹோமியோபதியோ, அல்லது சிரிப்போபதியோ...!
முதலில் சிரிப்பில் ஆரம்பிப்போம்.
சொர்க்கமா நரகமா
இறந்தவுடன் மேலோகம் செல்லும் சித்த, அலோபதி, ஹோமியோபதி மருத்துவர்கள் மூவர் கடவுளின் திருச்சபையில் தண்டனைக்காக காத்திருக்கிறார்கள்
அவர்களிடம் கடவுள் ''உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன். சரியான பதிலைச் சொன்னால் சொர்க்கத்துக்கு போகலாம். இல்லையென்றால் நரகம் தான்'' என்றார்.
முதலில் சித்த மருத்துவரிடம் ''சில வருஷங்களுக்கு முன்னால் ஒரு சொகுசு கப்பல் கடலில் மூழ்கியதே .! அதன் பெயர் என்ன ? '' என்றார்.
''டைடானிக்''
''சரி, நீ சொர்க்கத்துக்கு போ''
அடுத்து ஹோமியோபதி மருத்துவரிடம் '' அந்த கப்பல் மூழ்கியதில் எத்தனை பேர் இறந்தார்கள் ? ''
'' 1517 ''
''சரி, நீயும் சொர்க்கத்துக்கு போகலாம் ''.
அடுத்து அலோபதி மருத்துவரிடம் கேள்வி கேட்டார் கடவுள்
'' இறந்தவங்க பெயரெல்லாம் வரிசையாக சொல்லு..?..''
( இதை எழுதியதும் என் மனைவியை படிக்க சொன்னேன். படித்துக்கொண்டிருக்கிறார்.. என்ன சொல்கிறார் என்று பார்ப்போ........நோ.!.... பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் ஆமா.....!
பின் குறிப்பு; என் மனைவி ஒரு அலோபதி மருத்துவர் )
கேட்க கூடாத கேள்வி(18+)
தங்களது 25ஆவது திருமண நாளை கொண்டாடிய கணவர் ( தாத்தா ) தன் மனைவியிடம் கேட்டார்
''நமக்கு கல்யாணமாகி 25 வருஷமாச்சு. இத்தனை வருஷத்தில நீ எப்போதாவது வேற ஆம்பளையோட தப்பு பண்ணியிருக்கிறியா.?.அப்படி இருந்தாலும் பரவாயில்லை சொல்லு. நான் கோவிச்சுக்க மாட்டேன்.''
சற்று தயக்கத்துடன் மனைவி '' ஆமா , மூன்று தடவை மட்டும்.'' என்றார்.
''பரவாயில்லை சொல்லு''
''ஒரு தடவை நீங்க எதிர் வீட்டுக்காரரை அடிச்சுடீங்கல்ல. அப்ப உங்களை அரஸ்ட் பண்ணின இன்ஸ்பெக்டர், FIR போடாம, உடனே உங்களை வீட்டுக்கு அனுப்பினாரே எப்படின்னு நினைக்கிறீங்க ..''
''ஓகோ அதான் மேட்டரா.! சரி இது எனக்காக தானே பண்ணின.!.பரவாயில்ல...அடுத்து..?''
''உங்களுக்கு அப்பன்டிஸைடிஸ் வந்தப்ப, பணம் கட்டினால் தான் ஆபரேஷன் செய்வேன்னு சொன்ன டாக்டர், பணம் வாங்காமலேயே ஆபரேஷன் பண்ணினாரே எப்படி...!..''
''இது துரோகம் இல்லை. தியாகம். சரி... மூனாவது..?.''
''நீங்க ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் எலெக்ஷனில் ஜெயிக்கறதுக்கு 200 வோட்டு குறைவாகத் தானே இருந்தது. ஆனா ஜெயிச்சீங்களே எப்படி...!''
''...???!@#$%^&**........''
(எப்பூடி..!!!!)
(கடை விரித்தேன், கொள்வாரில்லை. சரக்கை மாற்றி பார்ப்போமே. என்று தான்..)
கடை விரித்தேன், கொள்வாரில்லை. சரக்கை மாற்றி பார்ப்போமே. என்று தான்..)///
ReplyDeletegud joke. i vote this post
நன்றி புரட்சிதலைவரே
ReplyDeleteசிரிக்கவும் சிந்திக்கவும் (??) வைக்கும் ஜோக்குகள். ஹி ஹி
ReplyDeleteவாழ்த்துக்கள்...
nice joke...
ReplyDelete'A' Nice joke
ReplyDeleteஹா ஹா ;-)
ReplyDeleteஅருமை....
ReplyDeleteஹா ஹா ;-) அருமை....
ReplyDelete