Saturday, September 18, 2010
மாரடைப்பு - HEART ATTACK -தெரிந்து கொள்ள வேண்டியவை
இந்தியர்களை அதிகம் தாக்கும் நோயாக மாறியுள்ள மாரடைப்பை பற்றி தெரிந்துகொள்ளவே இந்த பதிவு.
இதயத் தசைகளுக்கு செல்லும் இரத்தகுழாயில் அடைப்பு ஏற்படுவதையே மாரடைப்பு - HEART ATTACK - ACUTE MYOCARDIAL INFARCTION - என்கிறோம்.
எந்த வயதில் மாரடைப்பு வரும்...?
முன்பெல்லாம் 50-ஆக இருந்த மாரடைப்பு வரும் சராசரி வயது, நமது பழக்கவழக்கங்களின் காரணமாக வெகுவாக குறைந்துள்ளது. சமீபத்திய, நடிகர் முரளியின் மரணமே சான்று. கடந்த 3 வருடங்களில், 45 வயதிற்குள்ளாக மாரடைப்பு ஏற்படும் எண்ணிக்கை 5 மடங்கு அதிகறித்துள்ளது. பெண்களுக்கு பொதுவாக மாதவிலக்கு நிற்கும் காலம் வரை இந் நோய்க்கான சாத்தியகூறு குறைவு.
மாரடைப்பிற்கான அறிகுறிகள்
நெஞ்சின் மைய பகுதியில் வலி ( கவனிக்க - சினிமாக்களில் காண்பிப்பது போல இடது பக்கத்தில் அல்ல ) இருக்கும்.
வலியானது தொண்டை, கீழ்த்தாடை, தோள் பகுதிகளுக்கு பரவுவது போல தெரியும். சிலருக்கு வலியை விட எரிச்சல் அதிகமாக இருக்கும். இதை அஜீரணம் என தவறாக எடுத்துக் கொள்வர்.
அதிகமான வியர்வை இருக்கும். வாந்தி குமட்டல் இருக்கலாம்.
நெஞ்சில் ஒருவிதமான அசௌகரியம், (discomfort) படபடப்பு, போன்றவை மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
நீரழிவு (diabetes) நோயுள்ளவர்களுக்கு வலியில்லாத மாரடைப்பு (silent infarction) எற்படும். வியர்வை மட்டுமே இருக்கும் - வலி கொஞ்சம் கூட இருக்காது.
மேலும் வேகமாக நடக்கும் போது, படிகளில் ஏறும் போது நெஞ்சில் வலி ஏற்படுவது - நின்றவுடன் வலி குறைவதுவும் இதய வலி (angina) தான்.
மேற்சொன்ன அறிகுறிகள் சிலருக்கு மாறுபடலாம்.
காரணங்கள்
நீரழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், இரத்ததில் அதிக கொலஸ்டிரால், புகைப்பழக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.
நெஞ்சுவலி வந்தவுடன் என்ன செய்ய வேண்டும்.?
மேற்சொன்ன அறிகுறிகள் ஒருவருக்கு தென்பட்டால் அவரை அப்படியே படுக்க வைக்க வேண்டும். ஒரு அடி கூட அவர் நடப்பது நல்லதல்ல.
SORPITRATE 5 mg மாத்திரையை நாக்கிற்கு அடியில் வைக்கலாம். மிக விரைவாக நல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும்.
சில தவறான கணிப்புகள்
''காலையில் ரெண்டு பஜ்ஜி சாப்பிட்டேன் அதிலிருந்து நெஞ்சு எரிஞ்சுகிட்டே இருக்கு. லேசா வியர்க்குது '' என்ற ஒருவருக்கு ECG எடுத்து பார்க்கும் போது அவருக்கு மாரடைப்பு இருப்பது தெரியவந்தது. அவரது வியர்வையே நோய்கணிப்பிற்கு எனக்கு உதவியது. எனவே நெஞ்சுவலி இல்லாவிட்டாலும் கூட எரிச்சல், வியர்வை இருந்தால் அது மாரடைப்பாக இருக்கலாம்.
அதே போல் சர்க்கரை நோயாளிகளுக்கு எப்போதாவது HYPO GLYCEMEA எனப்படும் இரத்த சர்க்கரைகுறைவு எற்படும். அச்சமயம் படபடப்பு, லேசான வியர்வை எற்படும். இதில் அனுபவபட்டவர்கள் மாரடைப்பு ஏற்படும் பொழுது கூட அதை HYPO GLYCEMEA என தவறாக கணித்து ஜீனியை சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். எனவே நீரழிவு நோயினருக்கு அதிக வியர்வை ஏற்பட்டால் அது மாரடைப்பாக இருக்கலாம் என கவனத்தில் கொள்ள வேண்டும்.
வராமல் தடுக்கும் வழி என்ன?
மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையை அடையும் முன்பே இறப்பவர்கள் 20%. மருத்துவமனையில் இறப்பவர்கள் 20% என்றெல்லாம் புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இந்நோய் வராமல் தடுப்பது அவசியமாகும்.
தினமும் ஒரு மணி நேரமாவது ஓரளவு வேகமாக, நன்கு வியர்க்கும் படி நடக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் FASTING BLOOD SUGAR -110 mg% -க்கு அதிகமாகாமல் பார்க்க வேண்டும்.
கொலஸ்டிரால், இரத்த கொதிப்பு அதிகமுள்ளவர்கள் இவைகளை கட்டுபடுத்தவேண்டும்.
புகை பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.
மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா செய்யலாம்.
சுருக்கமாக எழுதிவிட்டேனென்று எண்ணுகிறேன். ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, விளக்கம் வேண்டுமானாலோ பின்னூட்டம் இடுக.! பதில் எழுதுகிறேன்.
லேபிள்கள்:
HEART ATTACK,
மாரடைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
அவசியமான பதிவு..... பகிர்வுக்கு நன்றி.....
ReplyDeleteThank you for visiting my blog. You have a nice one. Following.... Welcome to the Blog world.... Best wishes!!! :-)
பயனுள்ள பதிவு. தொடருங்கள் அன்பரே!
ReplyDeleteதொடருகிறேன்!!
பக்கத்திலே இருந்தே கலக்கிட்டீங்கள் சார் ..
ReplyDeleteநிறைய எழுதுங்கள் ..நான் ஒட்டு போடுறேன் (முடிஞ்சா காசு வாங்கிகிட்டு -சும்மா )..
மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு மக்கலிடம் குறைவாகவே உள்ளது. தங்களைப் போன்று மருத்துவ பதிவுகளை போடும் பதிவர்களை நான் பெரிதும் வரவேற்கிறேன்!
ReplyDeleteChitra, கக்கு - மாணிக்கம், curesure4u, எஸ்.கே, நன்றிகள் பல.! .மருத்துவனாக இருந்தாலும் என்னுள் இருக்கும் எழுத்தாளனுக்கும் வாய்ப்பு கொடுக்கிறேன்.
ReplyDeleteமருத்துவரையா, எதையும் தாங்கும் இதயம் இதையும் தாங்குமா?
ReplyDeleteஅத்தியாவசியமான மருத்துவ பதிவு.. எழுத்து நடையும் அருமையாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeletenanru
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete