Friday, March 11, 2011

தலைவலிக்கு சிறந்த மருந்து

       காலையில் எழுந்திருக்கும் போதே தலை கிண்ணென்றிருந்தது. கண்ணை திறக்க முடியவில்லை. நேற்றிரவு ' நடுநிசி நாய்கள் ' பார்த்த பாதிப்போ என்னவோ. 
    '' ராதா ''வென கூப்பிட வாயெடுத்தேன். அதற்கு முன்பே மெல்லிய கொலுசொலி.
      தலைக்கு குளித்து சரியாக துவட்டாத கூந்தலின் நுனியில் ஈரம் சொட்ட, அப்போதே மலர்ந்த பூவாக அருகில் வந்து என் தலைக்கருகில் கட்டிலில் அமர்ந்தாள், என் முகத்தை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவள் '' என்னங்க தலைவலியா ? '' என்றாள் நான் சொல்லாமலே.
      மெல்லிய விரல்களால் சற்று சூடாக இருந்த என் நெற்றியை தொட்டாள். வைகறையில் பறித்த மல்லிகை இதழ்களால் தொட்டது போலிருந்தது. அவள் கையை என் நெற்றியுடன் அழுந்த பிடித்தேன்.
     '' நேற்று நல்லாத்தானே தூங்கினீங்க '' என்றவாறு என் தலையை மெதுவாக கோதினாள்.  கண்களை திறந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். வட்ட முகத்தில் சற்றே பெரிய கண்கள். கூரான நாசி .சிவந்த சிறிய ஆரஞ்சு சுளை போன்ற இதழ்கள். அவள் சிரிக்க நினைத்ததை கன்னக்குழியும் கண்களும் காட்டி கொடுத்தன.
    '' என்ன பார்வை ''
    '' இல்ல... பார்த்தால் பசி தீரும்னு சொல்வாங்க. தலைவலி தீருமான்னு தெரியல.''
    '' நிஜமாகவே தலைவலி தானா '' என்றாள் புன்முறுவலுடன். 
    '' தலை ரெம்ப பாரமா இருக்குடி ''
      சிரித்தவாறே என் நெற்றியில் அவள் கன்னம் அழுந்த என்மீது சாய்ந்தாள். ஈர கூந்தல் என் முகத்தில் படர்ந்தது. கன்னத்தின் குளிர்ச்சி என் நெற்றிக்கு பரவ, சோப் வாசமும் ஷாம்பு வாசமும் கலவையாக என் நாசியை வருட, அவள் மூச்சுக்காற்று லேசான சூட்டில் முகத்தில் பட எனக்கு என்னவோ செய்தது. கண்களை மூடி படுத்திருந்தேன். மெத்தென்று நெஞ்சில் சாய்த்துக்கொண்டாள். 
    '' இப்ப வலி குறையுற மாதிரி இருக்கு ''  நெஞ்சோடு சேர்த்தணைத்து முத்தமிட்டாள்.
    '' இன்னும் குறையுது.''
    '' டாக்டர் ஃபீஸ் என்ன கொடுப்பீங்க.''
    '' என் உயிரை கூட.''
    '' அச்சச்சோ.''.என் வாயை மூடினாள் முதலில் விரல்களால் .....  எத்தனையோ பெண்கள் அழகாக இருப்பார்கள். என்னவள் ராதா அழகு மட்டுமல்ல அன்பால் அழகை நூறு மடங்கு அதிகமாக்கியவள். 
      கொஞ்ச நேரம் தூங்கிவிட்டேன். ராதாவின் இதழ்கள் என் நெற்றியில் ஒத்தி பிரியும்போது தான் விழித்தேன். தலைவலி முற்றிலும் இல்லை.
     ''காபி தரவா ? '' என்று எழுந்து போனவள் சூடான காபியுடன் என்னருகில் வந்தாள். கால் இடரியதா என்னவென்று தெரியவில்லை காபியை என் முகத்தில் கொட்டிவிட்டாள். அம்மா!!!!!!!.....திடுக்கென முழித்துப் பார்க்கிறேன் முகத்தில் தண்ணீர். கையில் செம்புடன் என் மனைவி கனகா.
     ''காலையிலிருந்து நாயா வேலை பார்த்துட்டு இருக்கிறேன் இன்னும் என்ன தூக்கம்...பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்ப வேண்டாமா. மனுஷனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு வேணும்....'' கத்திக்கொண்டிருந்தாள்.
      மீண்டும் தலை வலிப்பது போலிருந்தது. கண்களை மூடி ராதாவை தேடலானேன்.
  
     பின்குறிப்பு : மருத்துவ பதிவென்று படிக்க வந்தவர்கள் மன்னிக்கவும்

     பின்குறிப்பு 2 : இதை படித்து முடித்ததும் உங்களுக்கு லேசாக பெருமூச்சு வந்தால் ..''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்''


18 comments:

  1. No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
    நன்றி

    ReplyDelete
  2. பதஇவு நன்றாக இருக்கு. தலைவலி போக நீங்க போட்டிருக்குர படமே சூப்பர் சார்.

    ReplyDelete
  3. மருத்துவ பதிவென்று படிக்க வந்தவர்கள் மன்னிக்கவும்
    அப்ப இது மருத்துவ பதிவு இல்லியா..

    ReplyDelete
  4. நானும் மருத்தவப் பதிவுன்னு தான் நினைச்சேன். நல்லவேளை சொன்னீங்க பாஸ்.

    ReplyDelete
  5. மெல்லிய விரல்களால் சற்று சூடாக இருந்த என் நெற்றியை தொட்டாள். வைகறையில் பறித்த மல்லிகை இதழ்களால் தொட்டது போலிருந்தது. அவள் கையை என் நெற்றியுடன் அழுந்த பிடித்தேன்.//

    சகோதரம், வாசிக்கும் போது என்னென்னவோ பண்ணுது. அருமையாக உயிரைக் கவரும் உணர்வைக் கொடுத்து, நிஜமான காவியத்தைக் கண் முன்னே கொண்டு வருவது போல எழுதியுள்ளீர்கள்.
    நல்ல interesting ஆகப் படித்துக் கொண்டு வந்தேன். இடையில் உங்கள் மனைவி கனகா வந்து எங்களின் எதிர்பார்ப்பினைக், கதியில் திருப்பத்தினை ஏற்படுத்தி விட்டார். அருமையான வரணணைகள் நிறைந்த மனதை வருடும் கதை. சபாஷ்.

    ReplyDelete
  6. சகோதரம், உங்கள் பதிவுகளைத் தமிழ் மணத்தில் இணைத்தால் இன்னும் நிறைய வாசக்ர்களிடம் உங்கள் பதிவுகள் சென்று சேர வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன்.

    இதோ முயற்சி செய்து பாருங்கள்.

    http://www.tamilmanam.net/login/register.php

    இது அடுத்த லிங்.
    http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

    ReplyDelete
  7. யாருங்க அந்த ..கீதா.....?

    ReplyDelete
  8. ///யாருங்க அந்த ..கீதா.....?////

    கீதா எனது கற்பனை காதலி
    என்ன புரியவில்லையா?

    ReplyDelete
  9. thanks to

    Mohamed Faaique
    ரிஷபன்
    VELU.G
    நிரூபன்
    கோவை நேரம்
    Jey

    ReplyDelete
  10. உண்மையுலே படிக்கும்போது ஒரு இனம் புரியாத உணர்வு. மிக தெளிவான கோர்வையான வரிகள்.

    இப்போ எல்லாம், பலருக்கு, "மனைவி அமைவதெல்லாம் தரகர் கொடுத்த வரம்"... ஹிஹி

    ReplyDelete
  11. ஓ...இப்பிடியெல்லாம் மருந்து இருக்கோ !

    ReplyDelete
  12. //திடுக்கென முழித்துப் பார்க்கிறேன் முகத்தில் தண்ணீர். கையில் செம்புடன் என் மனைவி கனகா.//


    அய்யய்யோ அம்மாடியோ காப்பாத்துங்க காப்பாத்துங்க....

    ReplyDelete
  13. கதை சூப்பர் டாக்டர்....

    ReplyDelete
  14. தமிழ்மணத்திலும் இணச்சி விடுங்க டாக்டர்....

    ReplyDelete
  15. Super....
    எனக்கு வாரத்துக்கு ஒரு கற்பனை மனைவி சாதி ,மதம் ,நாடு பாகுபாடின்றி உண்டு :-)

    ReplyDelete