Thursday, June 23, 2011

''ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர் வாலியின் அந்தர்பல்டி

      


       முந்தைய ஆட்சிக்காலத்தில் கலைஞருக்கு நடந்த பாராட்டுக்கூட்டங்களில் கவிஞர் வாலி வாசித்த கவிதைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அதில் தான் எத்தனை முகஸ்துதிகள். இவர் போன்றோர் அடித்த ஜால்ரா சத்தத்தில் தன்னை மறந்து தூங்கிய கருணாநிதி ஆட்சியை கோட்டைவிட்டார்.
அதிலும் குறிப்பாக வாலி கருணாநிதியை புகழ்ந்த கவிதைகளை ஒரு புத்தகமாக போடலாம். அதே நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை தாழ்த்தி, நக்கல்- நையாண்டி செய்வார்.
    அதே வாலி சமீபத்தில் ரங்கநாயகி  என்ற தலைப்பில் எழுதிய கவிதை கீழே.....

                                          ரங்கநாயகி!

இலங்கையில்

இது காறும் நடந்தது -
போர் அல்ல; தீவிரவாதப்
போக்கினை அறவே...

தூர்க்கவேண்டித்
துப்பாக்கிகளில் -
ரவைகளை நிரப்பியதாம்
ராணுவம்!
சொல்கிறார்
'சோ’;
நாம்
நாணுவம்!

...

குலைகள் நடுங்கத் - தம்
குடில்கள் வாயிலில்...

சம்மணம் இட்டுச்
சாதாரணமாய் இருந்தோரை -

அம்மணம் ஆக்கினான்; அதன்பின்
அவர்தம் ஆவி போக்கினான்;

முலை உரித்து - மதுரை
மூதூரெரித்த மரபினரின்-
கலை உரித்தான்;
கற்பை உரித்தான்; உயிர்
கவர்ந்து கொடுங்
காலனெனச் சிரித்தான்!...

இத்துணை
இழிசெயல்களை இயற்றியோன் -
சிங்களக் காடை; இராணுவச்
சீருடையணிந்த பேடை!

தீர்த்தம் குறையாத் தேம்சு நதித்-
தீரத்திலிருந்து...

செயல்படும்
'CHANNEL 4’எனும்
தொலைக்காட்சி -
ஆவணப் படுத்தி
அகில மெங்கும் காட்டியது-
கொடுமை மலிந்த - மேற்சொன்ன
கோரம் மிகுந்த கொலைக்காட்சி!

...

இதுகண்டு
இதயம் கனத்து-
இங்கிலாந்துப் பிரதமரும்;
இதர பிரஜைகளும்...

'அச்சோ!’ என
அலறுவதை அறியாதவரா என்ன
இச் 'சோ’?

...

'சோ’ வைப்போல் - இச்
சோகத்தை...
அறிந்தும்
அறியாததுபோல்-
அறிதுயிலில்
அயர்ந்திருப்பவர்...

ஸ்ரீரங்கம் - அருள்மிகு
ஸ்ரீரங்க நாதர்; அவர்-
படுத்தபடி - இலங்கையைப்
பார்த்திருக்கிறார் என்று-
பாடுகிறார் - தொண்டரடிப்
பொடிகள் என்னும் தாதர்!

...

ஸ்ரீரங்கம் - தீவு;
ஸ்ரீலங்கா - தீவு;
தீவைப் பார்க்கிறது
தீவு;
ஆனால்
அக்கிரமத்திற்கொரு-
தீர்வைப் பார்க்க வேண்டாமா
தேவு?

அய்யா!
அரங்கநாதரே! - நீர்
பாம்பின்மேல்
படுத்து - வெறுமனே
பார்த்திருந்தால்
பயப்படுமா இலங்கை? அதன்காலில்-
பூட்டவேண்டாமா
'போர்க்குற்றம்’ எனும் விலங்கை?

'அருளாதாரம் இன்றித் - தமிழரை
அழித்தொழித்தார்க்குப்-
பொருளாதாரம் இன்றிப்
போகக் கடவது!’ - என்று...

விரைந்து - நீர்
விதித்திருக்க வேண்டாமா தடை?
தூங்கிக்கிடக்கவா - உமக்கு
தோசை; நெய்ப்பொங்கல்; வடை?
...

ரங்க நாதரே! - உங்கள்
ரங்க நாயகி...
உலக
உயிர்க்கெலாம் தாய்;
ஈழத் தமிழனும் - அவள்
ஈன்றெடுத்த சேய்!

 'பொறுத்தது போதும்’ எனப்
பொங்கி எழுந்தாள்;
அவள் தாள்தான் - இன்று
அனைத்துத் தமிழரும் தொழுந்தாள்!

 சான்றோர்
சபையைக் கூட்டி-
'போர்க்குற்றம்’ எனக் கூறினாள்;
பொருளாதாரத் தடை கோரினாள்!

...

வாக்களித்த ஸ்ரீரங்கத்து மக்கள்
வாழ்த்துகிறார்கள் இன்று-
'எங்க நாயகி’தான் - அந்த
ரங்க நாயகி என்று!
 ----------------------------------



'' கொட நாடு
அது கொடா நாடு '

இது வாலி அன்று கலைஞருக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்தில் வாசித்த வரிகள்.
ஆட்சியாளரை புகழட்டும். ஆனால் தேவையில்லாமல் ஜெயலலிதாவை இகழ வேண்டுமா?
ஆட்சி மாறியதும் ''கொடா நாடு'' ''எங்க நாயகி'' ஆகிவிட்டது.


   இதை படித்ததும் ''இந்தியனில்'' கவுண்டமணி சொன்னது நினைவுக்கு வருகிறது.
   '' அந்தர்பல்டிடா சாமி ''

 
  

13 comments:

  1. வாலியின் அந்தர்பல்டி.

    ReplyDelete
  2. ungal veetil oru pirachannai athai theerka ungalaal mudiyavillai / anal ver oruvaridam kettu theeruthu vittal - avarai pugalveergal...appoluthu anthar balti neengalum podukireergal enru thaane artham.
    Prachenaikku theervu allathu muthal adi edukkum ranganayagikku oru vazhthu kavithai eluthiyatharku anthar balti endru puram kooruvathu nandranru.

    nallana vazhthuvathu nandru....athu kadavulayinum sari sathan ayinum(avar kadavulaaga mathikka paduvar. yen endran nallavai seikiraar. nallavai mattum thane kadvul, nallavai seivathaal thaane mugasthuthiyum, pottrigalum) sari

    ReplyDelete
  3. sitharea........sitham thliya vendumo?

    ReplyDelete
  4. itthu ithuvallam oru manithana pinam

    ReplyDelete
  5. கருத்துக்கு நன்றி KrMani


    '' கொட நாடு
    அது கொடா நாடு '

    இது வாலி அன்று கலைஞருக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்தில் வாசித்த வரிகள்.
    ஆட்சியாளரை புகழட்டும். ஆனால் தேவையில்லாமல் ஜெயலலிதாவை இகழ வேண்டுமா?
    ஆட்சி மாறியதும் ''கொடா நாடு'' ''எங்க நாயகி'' ஆகிவிட்டது.

    ReplyDelete
  6. ஏனுங்க கவிஞர்கள்னாலே ஆட்சியிலிருப்பவங்கள நக்கிப் பொழைக்கிற பொழப்புதானுங்க” என்று சொல்லாமல் சொல்லும் வாலியின் தைரியத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    ReplyDelete
  7. he is 100% Poet. wait and see vairamuthu also will be in the queue.

    they are like nanal pul. (they will bend same direction of the air to avoid break) so no wonder.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. maatram ondru than maaratha ondru... to be continue...

    ReplyDelete
  10. ஒரு கவிஞராக வாலியை ரசிக்கின்றேன்.
    வாலி!
    உன் வரிகளில் தெரிகிறது வலி
    உன் வார்த்தைக்களின் ஏன் இந்த போலி
    ஈழத்தமிழன் கொண்டதோ உயிர் கிலி
    ஈனத்தவனாய் ஆட்சி மாறியதும் நீ கொண்டதும் கிலி
    நீ துதி பாடிய நிதியால் அறுந்தது பல தாலி
    அந்த நிதியால் கொடுக்கமுடியுமா இழந்த உயிர்களுக்கு கூலி
    கவிதைகளில் நீ பராக்கிரம சாலி
    களங்க மனத்தால் நீ என்றும் மக்கள் மனதில் எலி.

    ReplyDelete
  11. விரைந்து - நீர்
    விதித்திருக்க வேண்டாமா தடை?
    தூங்கிக்கிடக்கவா - உமக்கு
    தோசை; நெய்ப்பொங்கல்; வடை?
    ...

    "என்ன கொடும சார் இது......

    தொடை, விடை, எடை,,,, இன்னும் நிறைய இருக்கு வாலி அவர்களே...

    பத்திக்கு பத்தி சம்பந்தம் இல்லாம எழுதணும்..... உம்மை தடுப்பது யார்?

    தொடர்ந்து உளறுங்கள்...."

    ReplyDelete
  12. தவறை இடித்துரைப்பதும்
    சரியை பிடித்துரைப்பதும்
    பாட்டுப்புலவன் கடமை
    அதைப்பாழ்படுத்தி பேசல் மடமை.

    ReplyDelete