Friday, July 15, 2011

தங்கபாலு vs 'பவர் ஸ்டார்' காமெடி பே( ா‍)ட்டி

 

தமிழ் நாட்டின் சிறந்த நகைசுவையாளர்களான காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், 'பவர் ஸ்டார்' டாக்குடர் சீனிவாசனும், விகடன் வாரஇதழுக்கு பேட்டியளித்துள்ளார்கள். அதில் எது அதிகமாக சிரிப்பை வரவைத்தது என்பதை உங்கள் வாக்கெடுப்புக்கு விட்டுவிடுகிறேன்
.


முதலில் தானைத் தலைவர்  தங்கபாலு:

 ''தேர்தல் தோல்வியை எப்படி எடுத்துக்கிட்டீங்க?''
(சிரிக்கிறார்) ''ஒண்ணு மட்டும் நிச்சயம். கேரளா மாதிரி தமிழ்நாட்டு மக்களும் ஆட்சி அதிகாரத்தை மாத்தி மாத்திக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களுக்கு விஜயகாந்த்தோட மூன்றாவது அணி அமைக்க வாய்ப்பு இருந்தது. அ.தி.மு.க-வோட கூட்டணி அமைச்சு, இப்போ எதிர்க் கட்சி ஆகி இருக்கவும் முடியும். ஆனா, நாங்க தி.மு.க-வைக் கைவிட விரும்பலை. ஏன்னா ,(அவங்க எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிப்பாங்க, ரெம்ப நல்லவங்க) அவங்க எங்களோட பல வருஷமாக் கூட்டணியில் இருக்காங்க. ஒரு விஷயம் தெரியுமா... இந்தத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடையும்னு எனக்கு எலெக்ஷனுக்கு முன்பே தெரியும்!''

 ''தோத்துருவோம்னு தெரிஞ்சே, எதுக்கு கூட்டணிவெச்சீங்க?''
''அதுதான் கூட்டணி தர்மம். (அடேங்கப்பா!) ஜெயிப்போமா, தோற்போமான்னு தெரியாமலா, ஒரு தேசியக் கட்சிக்கு மாநிலத் தலைவரா இருப்பேன்! (நீங்க எப்பவுமே இப்படித்தானா... இல்லை, இப்படித்தான் எப்பவுமேவா?) காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு மாநிலத்துக்கும், அதற்குஏத்த சூழ்நிலைக்கு அரசியல் பண்ணணும். தனித்து ஆட்சி, கூட்டணி ஆட்சி, வெளியில் இருந்து ஆதரவுனு காங்கிரஸ் மேலிடம், அந்தந்த மாநிலச் சூழலை மனதில்வெச்சுதான் முடிவுகள் எடுக்கும். அந்த வகையில், தி.மு.க. கூட்டணி என்பது மேலிடம் எடுத்த முடிவு. காங்கிரஸ் தனித்து ஆட்சியைப் பிடிக்கணும். அல்லது காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையணும் என்பது எங்களின் கனவு. அதற்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டோம்!''
''இளைஞர் காங்கிரஸ் ஏகமா பில்ட்- அப் பண்ணாங்க. தி.மு.க-கிட்ட மல்லுக்கட்டி 63 சீட் வாங்கினீங்க. ஆனா, அஞ்சு சீட்தானே ஜெயிச்சீங்க?''
(கொஞ்சமாக டென்ஷன் ஆகிறார்) ''91-ல் வெறும் ரெண்டு சீட் ஜெயிச்ச தி.மு.க. திரும்ப ஆட்சியைப் பிடிச்சு இருக்கு. அடுத்த தேர்தலில் அ.திமு.க. நாலு சீட்தான் ஜெயிச்சது. அதுவும் திரும்ப ஆட்சியைப் பிடிச்சது. ஆனா, நாங்க அஞ்சு சீட் ஜெயிச்சு இருக்கோம். நாங்க மீண்டு வருவோம்... மீண்டும் வருவோம். எதிர்காலத்தில் தனிச்சு ஆட்சியைப் பிடிப்போம்!'' (அசத்தல் பாயின்ட் பிடித்த சந்தோஷத்தில் என்னைக் குறுகுறுவெனப் பார்க்கிறார்!)
''ஜெயலலிதா, 'இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியா அறிவிக்கணும்னு தீர்மானம் கொண்டுவந்ததைப்பத்தி உங்க கருத்து?''
''நல்ல விஷயம்... அதை நான் வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் ஈழப் பிரச்னைக்காக அதிகம் போராடின ரெண்டு பேர் யார் தெரியுமா? ஒண்ணு, பழ.நெடுமாறன். இன்னொண்ணு, நான். 1983-ல் இருந்து தமிழ் ஈழத்துக்காக நான் தனிப்பட்ட முறையில் போராடிட்டு இருக்கேன். லண்டன் மாநாட்டில் ஈழக் கொடி ஏத்தி இருக்கேன். பார்லிமென்ட்டில் 'தமிழ் ஈழம் இஸ் த ஒன்லி ஆன்ஸர்னு பதில் சொல்லி இருக்கேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகம்னா, பழ.நெடுமாறன்கிட்ட கேட்டுக்கோங்க!''
'' 'கூடா நட்பு கேடாய் முடியும்னு கலைஞர் சொல்லிஇருக்காரே?''
''நானும் படிச்சேன். எல்லாரும் எங்களைச் சொன்னதா நினைக்கிறாங்க. ஆனா, அவர் அந்த அறிக்கையில் ஒரு இடத்தில்கூட காங்கிரஸ் என்ற பேரை யூஸ் பண்ணலை. அதனால, அவர் எங்களைச் சொல்லலை. (நாங்களும் வலிக்காத மாதிரியே நடிப்போம்ல.) யாரைச் சொன்னாருன்னு இது வரைக்கும் தெரியலை!''
''ஸ்பெக்ட்ரம்ல வரிசையா தி.மு.க. தலைகள் உள்ளே போய்ட்டே இருக்கு... ஒவ்வொரு ராஜினாமா, ஒவ்வொரு அரெஸ்ட்டுக்குப் பிறகும், 'எங்க கூட்டணி பலமா இருக்குனு அறிக்கை விடுறீங்களே... எப்படி இது?''
''கூட்டணியில் இருந்தாலும், பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் சிறப்பு. ஊழலற்ற, மதவாதம் இல்லாத மத்திய அரசை அன்னை சோனியா வழிகாட்டுதலின்படி நடத்திட்டு இருக்கார் மன்மோகன் சிங். கைதாகி உள்ள தி.மு.க. பிரமுகர்கள் குற்றம் சாட்டப்பட்டவங்கதான். குற்றம் சாட்டப்பட்டவர் எல்லாரும் குற்றவாளி கிடையாது. நீதிமன்றத் தீர்ப்புதான் குற்றவாளியா இல்லையான்னு முடிவு செய்யும். அதனால, எங்க கூட்டணி தொடருது. இப்பவும் சொல்றேன்... எங்க கூட்டணி பலமா இருக்கு... எங்க கூட்டணி பலமா இருக்கு... எங்க கூட்டணி பலமா இருக்கு!''     அடுத்து நம்ம 'பவர் ஸ்டார்' டாக்டர் சீனிவாசன்

''ஒரு டாக்டரா மக்கள் சேவை பண்ண வந்துட்டு, சினிமா பக்கம் போய் ஜிங்கிலி ஆட்டம் போடுறது நியாயம்தானா?''
பவர்: ''டாக்டரா மக்கள் சேவை பண்ணிக்கிட்டு இருந்தா, இந்நேரம் இத்தனை பத்திரிகைகள்ல மின்னி இருக்க முடியுமா? ஈரோட்டுக்குப் போனாக்கூட, 'ஏய்! நம்ம பவர் ஸ்டார்னு எட்டி எட்டிப் பார்க்குறானுங்க. இந்த அளவுக்குப் பேரும் புகழும் கிடைக்குமா? லத்திகாவோட 100-வது நாளுக்கு எத்தனை பேர் வாழ்த்தினாங்க தெரியுமா? என்னதான் மருத்துவ உலகத்தில் மகத்துவங்களைப் படைச்சாலும், இந்த பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி கிடைச்சிருக்காதே!''
''மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க... 'லத்திகா’ 100 நாள் ஓடுச்சா? இல்லே, ஓட வெச்சீங்களா?''
பவர்: ''இதில் மறைக்க என்ன இருக்கு? தானா ஓடுச்சுன்னு சொல்றதைவிட, நானா ஓட்டினேன்னு சொல்றதுலதான் எனக்கும் பெருமை. இன்னிக்கு படம் எடுக்கிறது சுலபம். ஆனா, தியேட்டர் கிடைக்கிறது சாதாரண காரியம் இல்லை. பெரிய பெரிய தயாரிப்பாளர்களே தியேட்டர் கிடைக்காமத் தவிக்கிறப்ப, கமலா, சாந்தி, மகாலட்சுமின்னு அத்தனை தியேட்டர்காரங்களையும் நான் காக்கா பிடிச்சுவெச்சிருக்கேன். போன ஆட்சியில என்னோட படங்களை முடக்கிப்போட, எப்படி எல்லாம் திட்டம் போட்டாங்க தெரியுமா? ஆனாலும், 'உனக்காக ஒரு கவிதை’, 'மண்டபம்னு தொடர்ந்து ஹிட் கொடுத்தேன். இன்னிக்கும் 'லத்திகாபடத்தைப் பார்க்க, ஒரு நாளைக்கு 40 பேருக்கு மேல வர்றாங்க. கடைசி ஒரு ஆள் வர்ற வரைக்கும் படத்தை ஓட்டுங்கனு சொல்லிட்டேன். 150-வது நாள் விளம் பரத்தைப் பக்கம் பக்கமாக் கொடுக் கப்போறேன். கோடம்பாக்கம் அன்னிக்குத்தான் வயித்தெரிச்சல்ல தீ பிடிக்கப்போகுது பாருங்க!''
''நடிப்புங்கிற பேர்ல நீங்க பண்ற அட்ராசிட்டியைத் தாங்க முடியாம பலரும் தவிக்கிறதா பேச்சு இருக்கே?''
பவர்: ''தவிச்சாலும் சரி... தாக்குதல் நடத்தினாலும் சரி... எனக்கு பப்ளிசிட்டி தேவை. அதுக்காகத்தான் சினிமா உலகுக்கு வந்தேன். 'பணத்தை வெச்சுக்கிட்டு ஆட்டம் போடுறான்னு பலரும் என்னைத் திட்டுறாங்களாம். சில பேர் என் போஸ்டரை வெறிச்சுப் பார்த்து, கிழிக்கிறாங் களாம். என்ன வேணும்னாலும் பண்ணட்டும். நான் எதுக்கும் வெட்கப்பட மாட்டேன். நான் நடிக்கிறது என் மனைவிக்கே பிடிக்கலை. மத்தவங்களுக்குப் பிடிச்சா என்ன... பிடிக்கலைன்னா என்ன? இன்னொரு விஷயம் தெரியுமா? என்னோட மூணு மகள்களில் ரொம்பப் பிரியமான பொண்ணு லத்திகா. அவங்க மேல உள்ள பாசத்துலதான் என் படத்துக்கும் 'லத்திகானு பேர் வெச்சேன். படத்தைப் பார்த்த நாள்ல இருந்து, லத்திகா என்கிட்ட பேசுறதே கிடையாது. இதுக்கு அப்புறமும் நான் நடிக்கிறேன்னா... என்னோட தில்லை நீங்க ரசிக்கணும்... வரவேற்கணும்... கொண்டாடணும்!''
''சில பத்திரிகைகள்ல உங்களைப்பத்தி கிசுகிசுலாம் வருதே?''
பவர்: ''அதெல்லாம் நானா பரப்பிவிட்ட கிசுகிசு. அப்படியும் ஒண்ணு ரெண்டுதான் பேப்பர்ல வந்துச்சு. எத்தனை நடிகர்- நடிகை கள் கிசுகிசுவுக்காக ஏங்குறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு? 'அவரோடு கொஞ்சல்... இவரோடு கெஞ்சல்னு வந்தா, அந்த வாரம் முழுக்க நம்ம போன் பிஸி. ரசிகனும் முக்கியமான விஷயமா நெனச்சு, மூளையைக் கசக்கிக்கிட்டு அலைவான். மார்க்கெட்ல நம்ம பேர் நிலைக்க ணும்னா, தாரை தப்பட்டைகள் கிழியுற அளவுக்குக் கிசுகிசுக்களைக் கிளப்பிக் கிட்டே இருக்கணும். அதே நேரம், அதுபத்தி யாராவது கேட்டா... எரிஞ்சு விழணும். அப்போதான் கிசுகிசுவுக்கு ஒரு கில்மா எஃபெக்ட் இருக்கும்!''
சரி, சினிமாவில் உங்களுக்கு என்னதான் இலக்கு?''
பவர்: ''ரஜினி சார் எப்போ ரிட்டர்ன் வருவார்னு ஆசையா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். சூப்பர் ஸ்டாரா... பவர் ஸ்டாராங்கிற ஒரு போட்டியை உருவாக்கி, தமிழ் சினிமா உலகில் டெரரைக் கிளப்பணும். என்னோட அடுத்த படமான 'ஆனந்த தொல்லையை 'லத்திகாவோட 150-வது நாள் அன்னிக்கு ரிலீஸ் பண்ணப்போறோம். அதுக்கு அடுத்த படம், 'ராணாஎன்னிக்கு ரிலீஸ் ஆகுதோ... அன்னிக்கு களத்துக்கு வரும். அதுல சி.பி.ஐ. ஆபீஸரா வர்றேன். ஸீனுக்கு ஸீன் பட்டாசு பறக்கும். 'லத்திகாஓர் இயக்குநராகவும் என்னை ஜெயிக்கவெச்சிருக்கு. நானும் மதுரைக்காரன்தான். இப்போ வர்ற மதுரைக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுற கதைகள், என்கிட்ட டஜன் டஜனா இருக்கு. ஒவ்வொண்ணா ரிலீஸ் ஆகிறப்ப... பாலா பதறணும்... அமீர் அலறணும்... சசி இன்டஸ்ட்ரியைவிட்டே ஓடணும்!''

 -------------------------------------------

     யப்பா!! முடியலடா சாமி!!! இவங்கல்லாம் தெரிஞ்சுதான் பேசுறாங்களா இல்ல நடிக்கிறாங்களா!


1 comment:

  1. கலக்கிட்டீங்க சார்

    ReplyDelete