Thursday, August 4, 2011

''ஹேர்டை'' வீட்டுக்குள் இருக்கும் விஷம்

இப்போதெல்லாம் எல்லார் வீட்டு பாத்ரூமிலும் சோப்பு, ஷாம்பூ, வரிசையில் இடம்பிடிக்கும் மற்றொரு பொருள் ஹேர்டை. வாலிபர்கள் முதல் வயோதிகர்கள் வரை எல்லோரும் உபயோகிக்கிறார்கள். இதன் பின் விளைவுகள் பற்றி யாருக்காவது தெரியுமா?
ஹேர்டையில் உள்ள இரசாயனங்களும் அவற்றின் செய்கைகளும் :

ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். ஹெர்பல் ஹேர்டை என சொல்லப்படும் எதுவும் முற்றிலும் மூலிகைகளால் செய்யப்பட்டது அல்ல. அனைத்து ஹெர்பல்டைகளிலும் இரசாயனங்கள் சேர்க்கபடுகின்றன.
 எல்லா டைகளிலும் சேர்க்கப்படும் பொதுவான சில இரசாயனங்களை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.
  1. Ammonia : Garnier,  Pantene போன்ற விலை உயர்ந்த டைகளில் அமோனியா இல்லை. மற்ற பெரும்பாலானவற்றில் அமோனியா சேர்க்கிறது. இது முடிக்கு கெடுதலை உண்டாக்கும்.
             2. Hydrogen Peroxide : same as ammonia 
          3.Para-phenylenediamine (PPD) and tetrahydro-6-nitroquinoxaline, Coal tar,  Formaldehyde, DMDM Hydantoin, இவையெல்லாம் பெருபாலான ஹேர்டைகளில் சேரும். இவை அனைத்துமே கேன்சரை உண்டாக்கும் தன்மை கொண்டவை.
 4. Mercury or lead (பாதரசம், காரீயம்) : சில வகை டைகளில் சேர்க்கப்படும் இவ்உலோகங்கள் உடம்புக்கு கேடு விளைவிக்க கூடியவை.
ஹேர்டை தொடர்ச்சியாக உபயோகிப்பவர்களுக்கு கேன்சர் நோய் வரும் வாய்ப்பு அதிகமென தெரிகிறது.

ஹேர்டையும் அலர்ஜியும் :

டை உபயோகித்த சிறிது நேரத்தில் சிலருக்கு முகம் கண்களெல்லாம் ஊறல் ஏற்பட்டு வீக்கம் ஏற்படுவதை பார்க்கலாம். இதன் காரணம் பெரும்பாலான டைகளில் உள்ள PPD எனப்படும் ரசாயனமாகும். உடனடிடாக மாற்று மருந்து எடுக்காவிட்டால் உயிருக்கே கூட ஆபத்தாகலாம்.

ஹேர்டை தற்கொலைகள் :

முன்பெல்லாம் கிராமபுறங்களில் தற்கொலை முயற்சிக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை குடிப்பார்கள். இப்போது எளிதாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும் super….smol – எனும் டையை குடித்துவிடுகிரார்கள். இதில் சேரும் காரீயம் (lead) போன்றவற்றால் விரைவில் மரணமடைகிறார்கள். கீழே உள்ள தினமலர் செய்தியை பார்க்க


என்ன செய்யலாம்?.

முடி நரைக்காமல் இருப்பதற்கோ, அல்லது நரைத்த முடியை கருப்பாக்குவதற்கோ இதுவரை நிறுபிக்கப்பட்ட மருந்துகள் ஏதுமில்லை. கறிவேப்பிலை, எள், ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்கலாம்.
அயோடின் அதிகம் சேர்த்தால் இளநரை உண்டாக வாய்ப்பிருக்கிறது.
கரிசாலை எனும் செடியின் இலைகளை அரைத்து உலரவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு அந்த எண்ணெய்யை தலைக்கு தேய்க்கலாம்.
கண்டிப்பாக ஹேர்டை உபயோகிக்க வேண்டுமெனில் எப்போதாவது உபயோகிக்கவும்.
சிறு குழந்தைகள் கைகளுக்கு ஹேர்டை பாட்டில் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
 

20 comments:

 1. விழிப்புணர்வு பதிவு.

  ReplyDelete
 2. வழமை போல் நல்ல பதிவு...

  அறியத்தந்தமைக்கு நன்றி...

  இஸ்லாத்தில் முடிக்கு கருப்பு சாயம் பூசுவது தடுக்கப் பட்டுள்ளது. நரைத்த முடிக்கு மருதோனி பூசுவது விரும்பப்படுகிறது.

  ReplyDelete
 3. சார் ..உங்களின் இந்த பதிவுக்கு ஏன் அதிகம் பின்னூட்டம் எழுதப்படவில்லை என்று உணர முடிகிறதா ?..இந்த பதிவை படித்த பலர் டை உபயோகிப்பபவர்கள் என்பதும் -அவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி நிலை குலைந்து இருப்பார்கள் என்பது திண்ணம் ..

  உங்கள் இந்த பதிவும் எப்போதும் போல பஞ்ச்..

  எங்கிருந்து சார் அந்த தினமலர் புகைப்பட விளக்கத்தை சேர்த்தீர்கள் ...அருமை ..

  இன்று தான் படிக்க முடிந்தது ..மிக மிக அருமை ..
  இனிமேலாவது டை உபயோக்காமல் இருப்பார்களா என்று பார்ப்போம் ..

  அவுரி நல்ல டை பொருளாக உபயோக்கிகலாம் ..

  ReplyDelete
 4. விழிப்புணர்வு மிக்க பகிர்வு.வயதானவர்கள் தான் தோற்றத்தை பொலிவு படுத்த ஹேர் டை அடிக்கின்றார்கள் என்றால் இளவயதினரும் விதம் விதமாக ஹேர் கலரிங் செய்வதற்காக கெமிகல் கலந்த கலர்களை உபயோகிக்கின்றனர் என்பதுதான் சோகம்.

  ReplyDelete
 5. எங்கிருந்து சார் அந்த தினமலர் புகைப்பட விளக்கத்தை சேர்த்தீர்கள் ...அருமை ..

  இந்த நோயாளியை முதலில் பார்த்தது நான் தான். பின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினேன்

  ReplyDelete
 6. Ammonia : Garnier, Pantene போன்ற விலை உயர்ந்த ‘டை’களில் அமோனியா இல்லை. மற்ற பெரும்பாலானவற்றில் அமோனியா சேர்க்கிறது. இது முடிக்கு கெடுதலை உண்டாக்கும்.// this is not correct. garnier is having ammonia. godrej colour soft is not having ammonia. please correct. also garnier is more dangerous than all dies. hair falling is toomuch in Garnier.

  ReplyDelete
 7. nalla pathivu, thanks for remind.

  ReplyDelete
 8. நன்றி Peter John, Admin,
  Garnier (international brand) ல் அமோனியா இல்லை என்று தொல் மருத்துவ நண்பர் சொன்னதை உறுதிசெய்யாமல் எழுதிவிட்டேன் .மன்னிக்கவும்.
  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 9. ரொம்ப நன்றி ஐயா.

  ReplyDelete
 10. @ Peter John

  Thank you very much for additional information.

  ReplyDelete
 11. விழிப்புணர்வு மிக்க பகிர்வு.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. Anna, Maruthuva seithigal mihavum arumai. ithu pondru niraya ethirparkirom

  ReplyDelete
 13. ஒரு வகையில்இயற்கையை மறுக்கும் எந்த ஒரு செயலுமே ஆபத்துதான்...இல்லை டாக்டர்? செய்தியாகப் போட்டாலும் இந்தத் தற்கொலை சமாச்சாரம் சிலருக்கு புதிய ஐடியா கொடுத்தது போலாகி விடுமோ?

  ReplyDelete
 14. //செய்தியாகப் போட்டாலும் இந்தத் தற்கொலை சமாச்சாரம் சிலருக்கு புதிய ஐடியா கொடுத்தது போலாகி விடுமோ? //

  இதை நானும் யோசித்தேன். ஆனால் யதேச்சையாக குழந்தைகள் குடித்துவிடும் ஆபத்தை கருதி, பெற்றோர்களை எச்சரிக்கவே இத்தகவலை எழுதினேன்.

  ReplyDelete
 15. என்ன செய்யலாம்?

  எனக்கு தெரிந்த ஒரே வழி மொட்டை அடிப்பது DR ...

  ReplyDelete
 16. சூப்பர்

  ReplyDelete
 17. மிகவும் உபயோகமுள்ள பதிவு சகோ. விழிப்புணர்வுப் பதிவுங்கூட.

  யாருப்பா அது ஹேர்டை உபயோகப்படுத்துவது கொஞ்சம் இங்கே எட்டிப்பாருங்க அப்புறம் ஹேர்டைபக்கம் எட்டி என்ன எட்டாமல்கூட பார்க்கமாட்டீங்க..

  ReplyDelete
 18. டாக்டர்! வெகு நாளாயிற்று. உங்கள் பதிவு கொஞ்சம் ஆட்டம் கொடுத்து விட்டது. கருத்தமுடி கவலையை விட பாதிப்பின் கவலை பெரியதாகத்தான் இருக்கிறது. உபயோகமான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. பணிச்சுமை காரணமாக பதிவிட முடியவில்லை

   Delete